வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர் வரும் 18ஆம் நாள் இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி தொடர்பான ஓர் மாநாட்டில் பங்கு கொள்ளும் வகையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கிங்ஸ்ரன் மாநிலத்தில் இடம்பெறும் ஓர் ஒருங்கினைப்பு கூட்டம் ஒன்றில் பங்கு கொண்டு வடக்கின் தேவைகள் தொடர்பில் எடுத்துக்கூறும் நோக்கிலேயே மேற்படி கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சந்திப்பின் இறுதியில் பிரித்தானியாவின் குறித்த மாநிலமும் யாழ்ப்பாணம் நகர அபிவிருத்திக்குமான ஒர் சிநேக பூர்வ ஒப்பந்தமும் எழுதப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கு கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் எதிர் வரும் 16ம் நாள் இலண்டன் பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு முதலமைச்சருடன் மேலும் ஒரு மாகாண சபை உறுப்பினரும் பயணமாகவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.