சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையிலான படைகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன இதில் பல குழந்தைகளும், பெண்களும் பலியாகியுள்ளனர்.
இதனால் சிரியாவின் அலெப்போ நகரில் தாக்குதல் நடத்துவது தொடர்பான தீர்மானமானது ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், சிரியாவின் கிழக்கு அலெப்போ நகரம் 2 மாதங்களில் முற்றிலும் அழிந்துவிடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஐ.நா.விற்கான சிரிய தூதர் ஸ்டாபன் டி மிஸ்துரா கூறுகையில், “இன்னும் இரண்டு மாதங்களில் அல்லது இரண்டரை மாதங்களில் அலெப்போ நகரின் கிழக்கு பகுதி முற்றிலும் அழிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.