லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா எனப்படும் குறித்த நபர் தனது 15ஆவது வயதில் குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார்.
மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில்,
19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம்.
ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் அவனுடைய பயணம் எனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
நாட்டுக்குள் அகதிகள் தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த நேரத்தில், அனைத்து இடங்களிலும் இனவாதம் தலைதூக்கியுள்ள நேரத்தில், வேகமாக மாறிவரும் உலகத்திலும், நிச்சயமற்ற எதிர்காலத்திலும் மக்கள் நம்பிக்கையை இழந்த நேரத்தில் இப்பொழுது மேஜர் தர்மராஜ் என அழைக்கப்படும் லவனிடமிருந்து நான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். அவனுடைய எளிமையான வாழ்க்கைத் தத்துவம் என்னை அவனிடம் கட்டிப்போட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இன்று அவன் தன்னுடைய பயணத்தின் அடுத்த கட்டத்தில் இருப்பதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன்.