மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை ஆதரவு பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.
பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்திற்குமான சர்வமத அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக கட்டிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டு, பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக புதிய மாவட்ட செயலகம் வரை சென்றிருந்தனர்.
அங்கு சனாதிபதிக்கு கையளிப்பதற்காக மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைளித்துள்ளனர்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டத்திற்கு ஆதரவாக, வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களும் ஆதரவு பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.