மலையக மக்ககளின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரும் இன்று கவஈர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்,
மலையக தோட்டத் தொழிலாளர்கள் கோரும் 1000ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளன.
மலையகத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பள அதிகரிப்பை கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வடக்குகிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.