வட மாகாணத்தில் புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தாம் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ள போதிலும், தமது கருத்துக்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என்வும அவர் சாடியுள்ளார்.
இந்தநிலையில் அண்மையில் இடம்பெற்ற யாழ். சம்பவம் இதனை உறுதிபடுத்தியுள்ளதாகவும், எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடக்கில் புலனாய்வு செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் வடக்கில் காவல் நிலையங்களை அதிகரிப்பதுடன், இராணுவ முகாம்களை தொடர்ந்து பேண வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.