அரசு இமெயில்களை கவனக்குறைவாக கையாண்டதாக கூறப்படும் விவகாரத்தில் உறுதியான ஆதாரம் இல்லாமல் ஹிலாரிக்கு எதிராக விசாரணையை தொடங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது முக்கியத்துவம் வாய்ந்த அரசு தகவல்களை தனியார் இமெயில், சர்வர்கள் மூலம் அனுப்பி கவனக்குறைவாக கையாண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ., சட்ட விரோதமான செயலில் ஹிலாரி ஈடுபடவில்லை என்று கூறி கடந்த ஜூலை மாதம் விசாரணையை முடித்துக்கொண்டது.