அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும்
புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்.
வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கைவிடக்கூடாது. இதில் டிரம்ப் நிர்வாகம் ஒழுங்கு மற்றும் மதிநுட்பத்தை கடைபிடிக்க வேண்டும். என்று கூறினார்.அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் ஜான் பிரன்னன்