இலங்கையின் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சிறப்பான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு சிறப்பான வரப்பிரசாதங்களை வழங்கும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக சிலர் பிரச்சாரம் செய்து வருகின்ற போதிலும், இவ்வாறான பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரப்பிரசாதங்கள் மட்டுமே வழங்கப்பட உள்ளதாகவும், இதன் ஊடாக சிங்கள பௌத்த மக்களுக்கு எந்த வகையிலும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்க மாட்டார் எனவும், தேசிய ஒற்றுமையை உறுதி செய்து கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும், ஒற்றுமையின் ஊடாகவே அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.