முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமான கட்டத்திலேயே தொடர்ந்து இருந்துவருகிறது என்று அவருக்குச் சிகிச்சை அளித்துவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறிது நேரத்துக்கு முன்னர் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மாலை இதயச்செயலிழப்பை அடுத்து தொடர்ந்து மிக மோசமான கட்டத்தில் இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, எக்மோ மற்றும் பிற உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முதலமைச்சரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு கூர்ந்து கவனித்துவருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.