முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், அவருக்கு இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது சென்னை பெருநகர மாநகராட்சி.
75 நாட்கள் நோயுடனான போராட்டத்திற்கு பிறகு, நேற்று இரவு 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மரணமடைந்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின், பொது சுகாதாரத்துறை, ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை இன்று வழங்கியுள்ளது.
அதில் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக கூறப்பட்டுள்ளது. தந்தை பெயர் ஜெயராம், தாய் பெயர் சந்தியா என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நகர சுகாதார உத்தியோகத்தர் செந்தில்நாதன் அந்த சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார்.