தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் மார்கெட் ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மன் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.எவ்வாறாயினும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு பிரான்ஸ் நைஸ் நகரில், தீவிரவாதிகள் கனரக வாகனம் ஒன்றை மோத செய்து தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலில் 86 பேர் வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.