பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். ஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது.
மறைந்த மைக்கேலுக்கு வயது 53. உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் நேற்று உயிரிழந்துள்ளார்.