நின்டென்டோ நிறுவனத்தின் சூப்பர் மேரியோ ரன் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த கேம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.
ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெறும் நான்கு நாட்களில் 40 மில்லியன் டவுன்லோடுகளை சூப்பர் மேரியோ ரன் கடந்தது. இதை தொடர்ந்து ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான சூப்பர் மேரியோ ரன் கேமின் முன்பதிவுகள் கூகுள் பிளே ஸ்டோரில் துவங்கப்பட்டுள்ளது. இதனால் கேமிற்கு முன்பதிவு செய்யும் போது வெளியீடு தேதி குறித்த தகவல் வழங்கப்படும்.
ஒற்றை கையிலேயே விளையாடக் கூடிய சூப்பர் மேரியோ ரன் கேமில், மேரியோ தொடர்ந்து முன்னேறி கொண்டிருக்கும். இங்கு வெவ்வேறு பகுதிகளில் தாண்டி கேமில் முன்னேறி செல்ல வேண்டும். நீங்கள் தட்டுவதற்கு ஏற்ப மேரியோ ஒவ்வொரு விதத்தில் நகரும், இதனால் மேரியோ எவ்வாறு நகரும் என்பதை நீங்களே முடிவு செய்ய முடியும்.
இந்த கேமில் முன்னேறி செல்லும் போது அதிகப்படியான காயின்களை சேகரித்து அடுத்த கட்டங்களுக்கு முன்னேற வேண்டும். குறிப்பிட்ட அளவு சூப்பர் மேரியோ ரன் கேமினை உங்களால் இலவசமாக டவுன்லோடு செய்து விளையாட முடியும் என்றாலும் ஒரு கட்டத்தில் நீங்கள் கேமினை விலை கொடுத்து வாங்கினால் மட்டுமே தொடர்ந்து விளையாட முடியும் என நின்டென்டோ தெரிவித்துள்ளது.
ஐஓஎஸ் பதிப்பை போன்றே ஆண்ட்ராய்டு பதிப்பிலும் இலவச டெமோ லெவல்கள் வழங்கப்படும் என்றும் முழு கேமையும் அன்லாக் செய்யும் போது ரூ.620 செலுத்தி கேமினை வாங்க வேண்டும்.