கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவினை வின்னிபெக் மாநிலம் இந்த ஆண்டு டிசம்பரில் சந்தித்துள்ளதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வின்னிபெக்கில் எதிர்வரும் வாரங்களிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரலாற்றில் அங்கு பனிப்பொழிவு அதிகமாக இடம்பெறும் இரண்டாவது மாதமாகவும் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் நாள் வரையிலான நிலவரப்படி, அங்கு சுமார் 64 சென்ரிமீட்டர் வரையிலான பனிபொழிவு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அளவானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகம் என்பதுடன், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பத்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த வார இறுதியிலும் பெருமளவு பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாதத்தில் வின்னிபெக்கில் பதிவாகக்கூடிய பனிப் பொழிவின் அளவு வரலாற்றுப் பதிவாக அமையக் கூடும் எனவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.