ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சட்ர் நகரில் இன்றுகாலை கூலி வேலை செய்யும் சிலர் வேலைக்காக சாலையோரம் காத்திருந்தனர். அப்போது, அங்கு வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை பாக்தாத் நகரில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில்
நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் பலியானது நினைவிருக்கலாம்.