அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. மொத்தம் 435 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் 241 பேரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 194 பேரும் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், சபாநாயகரை தேர்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதில் 5 உறுப்பிகளை தவிர அனைவரும் ரியானுக்கு வாக்களித்தனர்.
சபாநாயகராக தேர்வு செய்யப்படுவதற்கு 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் ரியான் எளிதில் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரியானின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவுடன் பால் ரியானை மீண்டும் சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்து ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.