இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரெயில் சேவையை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.
உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடக விளங்கும் சீனா தற்போது சரக்கு ரெயில் சேவையை இங்கிலாந்து நாட்டிற்கு வரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சரக்கு ரெயில் சேவை சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகரில் இருந்து லண்டன் நகருக்கு இந்த ரெயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவை நேற்று யுவூ நகரிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது.
இந்த சரக்கு ரெயில் சீனாவில் இருந்து கஜகஸ்தான்,ரஷ்யா,பெலாரஸ்,போலாந்து,ஜெர்மனி,பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை கடந்து லண்டன் நகரை சென்று அடையும். இந்த சரக்கு ரெயில் சுமார் 12,000 கி.மீ தூரத்தை 18 நாட்களில் கடந்து செல்லும்.
யூவூ நகரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள்,சூட்கேஸூகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை அந்த ரெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
சீன அரசு பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்கனவே நேரடி சரக்கு ரெயிலை இயக்கு வரும் வேலையில் தற்போது லண்டன் வரை விரிவு படுத்தி உள்ளது. இந்த ரெயில் சேவை சீனாவிற்கும் லண்டன் நாட்டிற்கும் உள்ள வர்த்த உறவை மேம்படுத்துவதாக சீன அரசு கருதுகிறது.