உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் தமிழ் மாணவர்கள் முன்னிலை இடங்களைப் பெற்றுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள்,
கலைப் பிரிவில், யாழ்ப்பாணம் – மானிப்பாய் இந்து கல்லூரி மாணவன் பத்மநாதன் குருபரேஷன் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.
உயிரியல் பிரிவில் திருகோணமலை – கின்னியா மத்திய கல்லூரியின் மாணவன் ரொஷேன் அக்தார் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் தமிழ் மொழிமூலம் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் கல்முனை – காமல் ஃபாதிமா கல்லூரியின் மாணவன் க்லேரின் திலூஜன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் தமிழ் மொழிமூலம் இரண்டாம் இடத்தைம் பெற்றுள்ளார்.
உயிரியல் தொழில்நுட்பத் துறையில் ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலய மாணவி இல்யாஸ் பாதிமா அரோஸ அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் தமிழ் மொழிமூலம் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
பொறியியல் தொழில்நுட்பத் துறையில் யாழ்ப்பாணம், சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி மாணவன் கனகசுந்தரம் சதுர்ஷாஜன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.