வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ரொரான்ரொ பியர்சன் விமானநிலைத்தை வந்தடைந்துள்ளார்.
மார்க்கம் பிரம்டன் நகரங்களோடு இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும், சமூகம் சார்ந்த சந்திப்புகளையும் மேற்கொள்வதற்கும், கனடிய அரச மட்டங்களில் பல சந்திப்புகளை நடத்துவதற்குமாக அவர் கனடா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரொரன்ரோவை வந்தடைந்த முதலமைச்சரை மார்க்கம் நகரசபை சார்பில் லோகன் கணபதி பூங்கொத்து வழங்கி வரவேற்றுள்ளார்.
அத்துடன் கனேடிய அரசின் சார்பில் பிரம்டன் மேற்கு நாடாளுமன்ற உறுப்பினர் kamal Khera பூங்கொத்து வழங்கி வரவேற்றுள்ளார்.
முதலமைச்சர் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், பொதுமக்கள் கலந்து கொள்ளும் பெருநிகழ்வாக முதல்வரோடு ஒரு மாலைப்பொழுது 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை Pearson Convention center இல் நடைபெறவுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.