மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் வார இறுதியில் ஏற்பட்ட கடுமையான குளிரினால் இருபதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
துருவக் காற்று, வெப்பநிலையை மைனஸ் முப்பது டிகிரி செல்ஸியஸுக்கும் குறைவாக குறைத்துவிட, கண்டத்தின் தெற்கே துருக்கிய மற்றும் கிரேக்க தீவுகள்வரை பனி மூடிவிட்டது.