லாஸ் ஏஞ்சலஸ்ஸில் நடைபெற்ற 74 ஆவது கோல்டன் குளோப் நிகழ்ச்சியில் ஹாலிவுட் திரைப்படம் “லா லா லாண்ட்” ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.சிறந்த இசை அல்லது நகைச்சுவை திரைப்படம் உட்பட அந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட அத்தனை பிரிவுகளிலும் வெற்றிப் பெற்றது. மேலும் அதில் நடித்த எம்மா ஸ்டோன் மற்றும் ரயான் காஸ்லிங்கும் விருதுகளை பெற்றனர்.
மேலும் சிறந்த இயக்குநர், திரைக்கதை, பின்னனி இசை மற்றும் பாடல் என அனைத்து பிரிவுகளிலும் அத்திரைப்படம் விருதைப் பெற்றுள்ளது.
சிறந்த படமாக “மூன் லைட்” தேர்வு செய்யப்பட்டுள்ளது.
“மாண்செஸ்டர் பை தி சி” திரைப்படத்திற்காக அஃப்லெக் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். மேலும் சிறந்த திரைப்பட நடிகைக்கான விருதை இன்ப அதிர்ச்சியாக ஃபிரான்ஸ் நாட்டு கலைஞர் ஈசபெல் ஊப்பர் வென்றார்.
திரில்லன் எல்லி திரைப்படத்தில் நடித்த இஸபெல்லி, ஜாக்கி திரைப்படத்தில் ஜாக்கி கென்னடியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற நடாலி போர்ட்மானை தோற்கடித்து இந்த விருதை பெற்றுள்ளார்.
ஃபென்சஸ் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை பெற்ற வையோலா டேவிஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
ஃபென்சஸ் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை பெற்ற வையோலா டேவிஸ்
“வயோலா டேவிஸ்” 1950 பிட்ஸ்பர்க் இன் ஃபென்சஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருதை பெற்றார்.
அமெரிக்க போருக்கு பிறகு இன வேறுபாடுகளை குறித்து பேசும் ஆகஸ்ட் வில்சன் நாடகத்தை தழுவி அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
விருதைப் பெற்றுக் கொண்ட டேவிஸ், “ஒவ்வொரு நாளும், ஹாலிவுட் ஒரு நாடகத்தை படமாக எடுக்க வேண்டும் என நினைப்பதில்லை – இதனால் பணம் சம்பாதிக்க முடியாது. ஆனால் அது கலையின் வெளிப்பாடு மற்றும் இதயத்தின் வெளிப்பாடு” என்று தெரிவித்தார்.
இன்ப அதிர்ச்சியாக பிரிட்டன் நடிகர் அரோன் டெய்லர் ஜான்சன் “நாக்டர்னல் அனிமல்ஸ்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார்.
செசில் பி டிமில் விருதைப் பெற்றுக் கொண்ட மெரில் ஸ்டிரீப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
செசில் பி டிமில் விருதைப் பெற்றுக் கொண்ட மெரில் ஸ்டிரீப்
ஆனால் இந்த விருது மூன்லைட் திரைப்படத்தில் நடித்த மஹெர்ஷலா அலிக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
“சூடோபியா” சிறந்த அனிமேஷன் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. இந்த வருட கோல்டன் குளோப் நிகழ்ச்சியை ஜிம்மி ஃபலோன் தொகுத்து வழங்கினார்.
அவ்வப்போது தனது பேச்சில் டொனால்ட் டிரம்பை குறிப்பிட்டு பேசிய ஃபலோன், “அமெரிக்கா, மக்களின் வாக்குகளை மதிக்கும் ஒரு இடமாக கோல்டன் குளோப் நிகழ்ச்சியுள்ளது” என்று குறிப்பிட்டு அமெரிக்கா முழுவதும் குறைவான வாக்குகளை பெற்ற போதிலும் டொனால்ட் டிரம்ப் ஹிலரியை தோற்கடித்ததை பற்றி சூசகமாக கூறினார்.
செசில் பி டிமில் விருதைப் பெற்றுக் கொண்ட மெரில் ஸ்டிரீப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
செசில் பி டிமில் விருதைப் பெற்றுக் கொண்ட மெரில் ஸ்டிரீப்
“செசில் பி டிமில்” விருதைப் பெற்றுக் கொண்ட மெரில் ஸ்டிரீப், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனாட் டிரம்பை விமர்சித்துப் பேசினார்.
மாற்றுத் திறனாளி பத்திரிக்கையாளர் ஒருவரை கேலி செய்து பேசிய டிரம்பை குறித்து பேசிய மெரில் ஸ்டிரீப், “அவமரியாதை அவமரியாதையை தூண்டும், வன்முறை வன்முறையை தூண்டும்”. அதிகாரத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்தினால் நாம் எல்லாரும் தோற்றுப்போவோம்” என்று கூறினார்.
தொலைக்காட்சி பிரிவில் பிரிட்டன் கலைஞர்கள் பலர் விருதுகளை பெற்றனர்; “தி நைட் மானேஜர்” தொடருக்காக டாம் ஹிட்டல்ஸ்டன், ஹூக் லாரி மற்றும் ஒலிவியா கால்மன் ஆகியோர் விருதுகளை பெற்றனர்.
நெட்ஃபிளிக்ஸில் “தி க்ரெளன்” தொடரில் ராணி 2ஆம் எலிசபெத்தாக நடித்த க்ளைரி ஃபாய் தொலைக்காட்சி தொடருக்கான சிறந்த நடிகை விருதை பெற்றார்.
இந்த விருது வழங்கும் நிகிழ்ச்சியில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார்.