பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க…. கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் :
கருப்பட்டி தூள் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
பால் – 3 கப்
தண்ணீர் – 3 கப்
நெய் – அரை கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி – தேவைக்கு
உலர் திராட்சை – 1 தேவைக்கு
பாதாம் – 10 (விருப்பப்பட்டால்)
பிஸ்தா – 10 டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)
செய்முறை :
* அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
* அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
* பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.
* பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.
* மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.
* அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
* அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
* எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
* முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறவும்.
* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.
* சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.
குறிப்பு :
* கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்