உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது.
இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை டவுன்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் தரவுள்ளது. இதன்படி பேஸ்புக்கில் டவுன்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்கள் வர உள்ளது. எனினும் இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீடியோக்கள் குறைந்தது 90 நொடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களில் 20 நொடிகள் பின்னர் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
மேலும் குறித்த விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விளம்பரங்களின் ஊடாக வீடியோக்களை டவுன்லோடு செய்பவர்களுக்கு 55 சதவீத லாபத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாள் தோறும் பேஸ்புக் ஊடாக பில்லியன் கணக்கான வீடியோக்கள் பார்வையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.