முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் அமைந்தது.
இச் சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் சமூக, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

இந்தப் பெண்களின் வாழ்வை மேம்படுத்தவும் அவர்களின் வினைத்திறனை அதிகரித்து நம்பிக்கையூட்டவும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியிருக்கும் சட்ட நியமங்கள் வாயிலாக, ஒன்ராறியோ அரசால் எமக்கு உதவ முடியுமா?” எனச் சி.வி.விக்னேஸ்வரன் அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.முதலமைச்சரோடு வேறு பல விடயங்களையும் கலந்துரையாடிய Tracy MacCharles தமிழ் மக்களின் துயரத்தின் ஆழத்தைத் தான் புரிந்து கொள்வதாகவும் இப்பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அடையாளம் காணப்பட்ட சிக்கல்களுக்குத் தாங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான வழிகளைக் கண்டறிவதாகவும் குறிப்பிட்டார். வடமாகாணசபையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் இருப்பின் அவற்றை நிச்சயமாகப் பரிசீலிப்போம் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு நிறைவாக நடைபெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்தனர்