சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குயாங்டாங் மகாணம். அதேபோல் வடக்குப் பகுதியில் உள்ள ஹுனான் மகாணம். இந்த இரண்டு மகாணத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை குயாங்டாங் மகாணத்தில் உள்ள குயிங்யுயான் நகரம் வழியாக செல்கிறது.
குயிங்யுயான் நகரம் நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற கொண்டிருந்த கார்கள் திடீரென ஒன்றுக்கொன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. இப்படி 19 கார்கள் மோதிக் கொண்டதில் 7 கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.