அடிமட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் நாடு தழுவிய அளவிலான நீண்டநாள் சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று கியூபெக்கில் பல்வேறு மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
இன்று காலையில் லக் மக்னட்டிக்(Lac Megantic) நகரபிதாவுடனான சந்திப்புடன் தனது சுற்றுப் பயணத்தினை ஆரம்பிக்கவுள்ள பிரதமர், ஷேர்புரூக் மற்றும் கிரான்பி (Sherbrooke, Granby) பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்வேறு மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஷேர்புரூக்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் ஊடகங்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ள பிரதமர், அதன் பின்னர் கிரான்பியில் உள்ள உணவகம் ஒன்றில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை நேற்றும் பல்வேறு சந்திப்புக்களில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, எண்ணெயக் குழாய் அமைப்புத் திட்டம், நேட்டோ அமைப்புக்கான கனடாவின் உதவித் திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அத்துடன் மிகக் குறுகிய காலத்தில் 25,000 அகதி மக்களை உள்ளீர்த்ததன் மூலம் பல்வேறு தரப்பினருக்கும தமது அரசாங்கம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.