இந்த இடத்தில் மேலும் சில கேள்விகளை கேட்டகவேண்டும் . ராஜதந்திரப் போர் எனப்படுவதை அவர்கள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள? ;இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு புவி சார் அரசியல்பிரச்சினை தான் என்பதனை அவர்கள் விளங்கி வைத்திருக்கறார்களா? ஆயின் அதற்குரிய மூலோபாயப் பொறி முறை என்ன? அப்படி ஏதும் பொறி முறை அவர்களிடம் உண்டா? அதை முன்னெடுப்பதற்கு வேண்டிய வெளிவிவகாரக் குழு ஏதும் அவர்களிடம் உண்டா? இந்தியப் பிரதமரோடு உரையாடினால் மட்டும் போதுமா? இது தொடர்பில் முடிவுகளை எடுக்கும் கொள்கை வகுப்பாளர்களை நோக்கி எதும் ‘லொபி’ செய்யப்பட்டதா?