அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநராக மைக் பாம்பேயோவை உறுதி செய்து அமெரிக்க செனட் அவை ஒப்புதல் அளித்துள்ளது.கான்சாஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினரான பாம்பேயோ, அமெரிக்காவின் உலகளாவிய உளவாளிகள் வலை அமைப்பின் தலைமை பொறுப்பை வகிப்பார்.
ஆனால், சிஐஏ முகமை மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே ஒரு பயனுள்ள அலுவல் ரீதியான உறவினை உருவாக்குவதே மைக் பாம்பேயோவின் உடனடி பணியாக இருக்கும்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக ரஷ்யா மிகவும் தீவிரமாக பணியாற்றியதாக கண்டறிந்து தகவல் கசிய விட்ட சிஐஏ முகமை மீது முன்னதாக டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.