நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவில், இந்த வாரம் சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி அமைப்புக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளஇந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசியாவைச் சேர்ந்த 8 நாடுகள், சார்க் என்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் கூட்டம் ஆண்டுதோறும் ஒரு முறை நடைபெறும்.
அவ்வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பாகிஸ்தான் நாட்டில் 19-வது சார்க் மாநாடு நடைபெற இருந்தது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி என்ற இடத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு இந்தியா மாநாட்டை புறக்கணித்தது. இந்தியாவைத் தொடர்ந்து வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளும் புறக்கணித்ததால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வாரம் நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில், சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி அமைப்புக்குழு கூட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் இந்த கூட்டம் நடைபெறும் என வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், சார்க் நாடுகளுக்கிடையே உள்ள சில பிரச்சனைகள் மற்றும் சார்க் செயலகத்தின் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், அடுத்த சார்க் மாநாட்டை நடத்துவதற்கான இடம் மற்றும் தேதியை முடிவு செய்வது குறித்தும் பேசப்படும்.
சார்க் மாநாட்டை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதாக, சமீபத்தில் பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.து.