தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடைகள் அகன்றுள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த தடையை நீக்க பல லட்சம் இளைஞர்கள் வரலாறு காணாத புரட்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்விளைவாக விளைவாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசும் ஜனாதிபதியும்; ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஜனாதிபதி தற்போது ஒப்புதல் அளித்துள்ள இந்த சட்டம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன்பின்னர் தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
இதேவேளை தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நாளை நீதிபதிகள் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.