வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மற்றிஸ் ( James Mattis )இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அணுவாயுத பயன்பாடு குறித்து இவ்வாறு வடகொரியாவிற்கு, எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் தென்கொரியாவிற்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப் போவதாகவும் அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு கட்டமைப்பின் உதவி தென் கொரியாவிற்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியா தொடர்ச்சியாக அணுவாயுதம் மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகின்ற நிலையில் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா தொடர்ச்சியாக இராணுவத்தினரை நிலைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.