தமது சொந்த காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இந்த நிலையில் தமது போராட்டங்களின் போது கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் உதாசீனப்படுத்தபட்டதாகவும், எனினும் இம்முறை தாம் உறுதி மொழிகளை நம்பி போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இராணுவத்தினரிடம் கலந்துரையாடிய பின்னர் மக்களிடம் கலந்துரையாடுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தம்மிடம் தெரிவித்து சென்றதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது. தமது வாழ்விடம் மறுக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் வகையில் கறுப்பு பட்டிகளை கழுத்தில் அணிந்து தமது எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டம் நேற்று காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்தே, பொதுமக்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். 60 வருடத்திற்கு மேலாக தாம் குறித்த காணிகளில் வசித்து வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றதாகவும், 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, தமது காணிகளை இராணுவத்தினர், கையகப்படுத்தியிருந்த நிலையில் பல போராட்டங்களை முன்னெடுத்த போதும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.இன்று சந்தித்து கலந்துரையாடினார்.