ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கட்டப்பட்டுள்ள 4000 வீடுகளை முன்தேதியிட்டு சட்டப்பூர்வமாக்கி தாக்கல் செய்யப்பட்ட ஒரு சர்ச்சைஇந்த சட்டத்திற்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளரான பாலத்தீனருக்கு அவருடைய நிலத்திற்கு பதிலாக பணம் அல்லது வேறு நிலம் வழங்கப்படும்.
பரந்த அளவில் சர்வதேச ரீதியாக எதிர்ப்பு இருந்த போதும், முந்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை விட இஸ்ரேல் குடியேற்றங்கள் தொடர்பாக மென்மையான அணுகுமுறையை புதிய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கிறார்.
டிரம்ப் தலைமையில் புதிய அமெரிக்க நிர்வாகம் பொறுப்பேற்ற பின்னர் துணிச்சல் பெற்றுள்ள இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஒப்புதல் அளித்தது உள்பட அண்மைய வாரங்களில் குடியேற்றங்களுக்கு ஆதரவான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.க்குரிய சட்டம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.