அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட ஏனைய தலைவர்களைச் சந்திப்பதற்காக கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் அமெரிக்கத் தலைநகர் வோசிங்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் றெக்ஸ் டிலர்சன், நாடாளுமன்ற சபாநாயகம் பவுல் றியான் உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் ஏனைய முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் செனட் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைவர் பொப் கோர்க்கர், செனட்டரும் மூத்த குடியரசுக் கட்சி உறுப்பினருமான ஜோன் மக்கய்ன் உள்ளிடோரும் இந்த சந்திப்குக்களில் அடஙகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்தினை அடுத்து அதனை எதிர்கொள்ளும் வகையிலேயே அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது கிறிஸ்டியா ஃபிறீலான்ட் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே கனேடிய வெளியுறவு அமைச்சரின் இந்த அமெரிக்க பயணம் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க தேர்தல்களின் பின்னர், வர்த்தக அமைச்சராக இருந்த வேளையில், ஏற்கவே கட்ந்த டிசம்பரில் அமெரிக்காவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு சந்திப்புக்களை மேறகொண்டிருந்த கிறிஸ்டியா ஃபிறீலான்ட்டின் தற்போதய இந்த பயணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நோக்கப்படுகிறது.
ஏற்கனவே நேற்று திங்கட்கிழமை கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அமெரிக்க பாதுகாப்பு தலைமையகனமா பென்டகனில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், கனேடிய நிதி அமைச்சரும் நாளை அமெரிக்காவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளமை குறிபபிடத்தக்கது.