ட்சித் தலைமைக்கு எதிராக பன்னீர் செல்வம் நடந்து கொள்வதன் பின்னணியில் திமுக இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலர் சசிகலா குற்றம் சாட்டினார்.
விளம்பரம்
முதல்வர் பதவியிலிருந்து விலக கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்தார்கள் என்று சசிகலா மீது குற்றம் சாட்டி ஓ. பன்னீர் செல்வம் குற்றம் சாட்டிய சில மணி நேரங்களில் சசிகலா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு விஷம் வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறவில்லை: அ.தி.மு.க.
அதிகாலை சுமார் 1.15 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் முன் தோன்றிய சசிகலா, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல் முறையாக பதிலளித்தார்.
ஓ. பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைக்குப் பின்னணியில் மத்திய அரசு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, திமுக உள்ளது என்று பதிலளித்தார் சசிகலா. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்த நான்கு நாட்கள், முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
குடியரசுத் தலைவருடன் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு குழுவாக இருக்கிறார்கள் என்றும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்த சசிகலா, புதன்கிழமை காலை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நிச்சயமாக நீக்கப்படுவார் என்று சசிகலா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் : பி. ஹெச். பாண்டியன் குற்றச்சாட்டு
முன்னதாக, அமைச்சர்கள் மற்றம் முக்கியத் தலைவர்களுடன் அவர் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம்
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு, புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தன்னை யாரும் பொருளாளர் பதவியிலிருந்து நீக்க முடியாது என்று பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.