217 ஆம் ஆண்டிற்கான எழுக தமிழ் பேரணி இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி.வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த எழுக தமிழ் நிகழ்வின் போது பிரகடனம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.