எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் அறிக்கை அச்சிடப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த அறிக்கையை, அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிக்கை அமைச்சு அலுவலகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அச்சிடப்படுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.