எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி வதைக்கும். இதனால் அளவுகடந்த வறட்சி, வெயில், மழை ஆகியவை ஏற்படுகிறது.கடந்த 2015-ம் ஆண்டின் சென்னை மழை, வெள்ளத்திற்கு எல் நினோவும் முக்கியக் காரணமாகும்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டில் ‘எல் நினோ’வின் தாக்கம் 50% அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் “கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடந்த 15 நாட்களாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வருடம் எல் நினோவின் தாக்கம் 6 மாதங்களுக்கு மேல் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எல் நினோவின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலுக்கு உட்பட்ட பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான வெப்பம், வறண்ட வானிலை நிலவும் என கூறப்படுகிறது.