நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மாணவர்களும், இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் கசிவால் புற்றுநோய் ஏற்படுவதாக அச்சம் நிலவுகிறது. வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் தங்களுக்கு தேவையில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகளும், தொழிற்சங்கங்களும், வணிகர் அமைப்புகளும் ஆதரவு அளித்து