ரொறொன்ரோ- ஒன்ராறியோ மாகாணம் பூராகவும் 300 பாடசாலைகள் மூடப்படலாம் என ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார். மிட்சி ஹன்ரர் இந்த எண்ணிக்கையை இன்று கேள்வி நேரத்தில் தெரியப்படுத்தியுள்ளார். பாடசாலைகள் மூடப்படுவதை தள்ளிப்போடவும் எந்த பாடசாலைகள் மூடப்படும் என்ற தகவல்களையும் கோரி புறோகிறசிவ் கன்சவேட்டிவ் தற்கால தடை ஒன்றை கோரியுள்ளது. செவ்வாய்கிழமை மூடப்படவுள்ள பாடசாலைகள் குறித்த தன்னிச்சையான எண்ணிக்கையை கொடுக்க முடியாதென நிருபர்களிடம் தெரிவித்த ஹன்ரர் தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளை தவிர்த்து வெளியேறினார். 300பாடசாலைகள் சம்பந்தப்பட்ட 43 மதிப்பாய்வுகள் தற்போது நடைபெறுகின்றன எனவும் 2016-17கல்வி ஆண்டில் 19 பாடசாலைகளை மூடுவதற்கு பாடசாலை சபை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.