மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு (Advance Polls) இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மார்ச் 24, வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமான முற்கூட்டிய வாக்களிப்பு மார்ச் 27 திங்கள்வரை நடைபெறும். மதியம் 12:00 மணிமுதல் இரவு 8:00 வரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும். வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அட்டைகளில் வாக்களிப்பு நிலையங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு 416-364 7770 என்ற இலக்கத்திற்கு தமிழ் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.