வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் 43 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இன்று 47ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இவ்வாறான நிலையில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை கண்டாவளை பொது அமைப்புகள் மற்றும் கண்டாவளை மக்கள் ஒன்றிணைந்து அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேபோல முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலை ஆகிய இடங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.