மன்செஸ்ட்டர் குண்டு வெடிப்பின் எதிரொலியாக, ரொரன்ரோ எயர்கனடா நிலையம் உட்பட, எதிர்வரும் நாட்களில் பாரிய நிகழ்வுகள் நடைபெறவுளள் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரொரன்ரோவில் அவ்வாறான உடனடி அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்று கூறப்படுகின்ற போதிலும், நிகழவுகளுக்க வருவோர் தாம் பாதுகாப்பாக இருப்பதனை உணர்ந்து கொள்வதற்கும், நிகழ்வுகளுக்கான வருகையாளர்களின் தயக்கத்தை போக்கி அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த வார இறுதியில் “Canadian superstar” நிகழ்வும், அடுத்துவரும் வாரங்களில் அனைத்துலக பிரபலங்களின் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ள எயர்கனடா நிலையத்தில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய மன்செஸ்ட்டர் தாக்குதலில் பெருமளவானோர் கொல்ல்ப்பட்டுள்ள நிலையில், கலை நிகழ்வுகளுக்கு வருவோர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பய உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே பயங்கரவாதத்தின் விளைவு எனவும் பொதுப் பாதுகாப்ப ஆய்வாளரான கிறிஸ் லுயிசும் தெரிவித்துள்ளார்.
முடிந்தவரையில் எத்தனை பேரை கொல்ல முடியோ அத்தனை பேரைக் கொன்று, எத்தனை பேருக்கு காயங்களை ஏற்படுத்த முடியுமோ அத்தனை பேருக்கு காயங்களை ஏற்படுத்தி, அனைவரையும் அச்சத்துக்குள் தள்ளுவதே பயங்கரவாதத்தின் இலக்கு என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.