இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மறந்து போனாலும் ஐ.நா.வில் உள்ள மக்களும், அதிகாரிகளும் மறக்கவில்லை என மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து அனைத்து விடையங்களையும் ஐ.நா வில் உள்ள அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
சொன்னவற்றை எல்லாம் இலங்கை அரசாங்கம் செய்கின்றார்களா என்பதனை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் அக்கறை இன்றி செயற்பட்டால் ஐ.நா.தூதுவர் வந்து யுத்தக்குற்றச் சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.
அதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு. இன்று இதற்கான தீர்வு கிடைக்காது விட்டாலும் என்றோ ஒரு நாள் தீர்வு கிடைக்கும்” என ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்தார்.