எட்மண்டனில் நடைபெறவுள்ள மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது சந்தேக நிலையினை தோற்றுவித்துள்ளது.
கனடாவின் தேசிய அளவிலான மூன்று பழங்குடியின குழுக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையெ அறித்ததையடுத்து இந்த சந்தேக நிலை எழுந்துள்ளது.
குறித்த மாநாட்டில் மீள் நல்லிணக்கத்திற்கான பரீட்சார்த்தம் என்று கூறப்படும் விடயங்கள் எதுவும் உள்ளடக்கபடாத பட்சத்திலேயே அவர்கள் இம்மாநாட்டை புறக்கணிப்பதாக கூறப்படுகின்றது.
குறித்த இந்த மாநாட்டில் நாட்டின் ஐந்து பழங்குடியின குழுக்கள் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று பழங்குடியின குழுக்கள் அதிலிருந்து விலகியிருப்பது இம்மாநாடு நடைபெறுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.