பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திக் பல பாகங்களிலும் காட்டுத்தீ கட்டுக்கடங்காது பரவிவரும் நிலையில், இதனால் இதுவரை ஏற்பட்டுள்ள சேதாரங்கள் தொடர்பில் தெளிவான விபரங்கள் எவையும் காண்டறியப்படாத நிலை காணப்படவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காட்டுத் தீயினால் ஏற்கனவே பல குடியிருப்பு பகுதிகளும் தீக்கிரையாகியுள்ள நிலையில், அவற்றில் எத்தனை வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய கட்டுமானங்கள் அழிவடைந்தள்ளன என்ற தெளிவான விபரங்கள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஷ்கிரோஃப்ட்(Ashcroft) பகுதியில் மாத்திரம் 423 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பிரதேசம் எரிந்து போயுள்ளதாகவும், இவற்றை விடவும் மாநிலத்தின் பல பாகங்களிலும் பெருமளவு பகுதிகள் காட்டுத் தீயினால் கருகிப் போய் விட்டதாகவும், எனினும் இவற்றில் எத்தனை கட்டிடங்கள் சிக்குண்டன என்பது தெரியவில்லை எனவும் காட்டுத் தீ கட்டுப்பாட்டுத் தகவல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் காலநிலை காரணமாக காட்டுத்தீ மிகவும் தீவிரமாக பரவி வருவதாகவும், இந்த தீயணைப்பு நடவடிக்கைக்காக கடந்த வாரத்தில் வந்திருந்த நிபுணர்கள் அனைவரும் இந்த காட்டுத்தீப் பரவல் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதனை சுட்டிக்காட்டியதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
எனவே இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பது என்பது மிகவும் சிக்கலான நடவடிகையாக காணப்படுவதாகவும், அதனாலேயே பெருமளவு மக்களை வெளியேறுமாறு பணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.