அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைக்கும் குடியரசுக் கட்சியின் திட்டத்தினால் 32 மில்லியன் அமெரிக்கர்கள் சுகாதார பாதுகாப்பினை இழக்க நேரிடும் என காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் முன்னறிவித்துள்ளது.
காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகத்தின் தகவல்களின் பிரகாரம், மருத்துவக் காப்பீட்டு செலவு அடுத்த ஆண்டில் 25 சதவீதம் அதிகரிக்கும் என்றும் 2026 ஆம் ஆண்டளவில் இரட்டிப்படையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குடியரசுக் கட்சியின் புதிய சுகாதார பராமரிப்பு சட்டமூலத்தினால், 473 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும் என்று காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் கணித்துள்ளது.
குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிள்ள செனட் சபையில் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைக்கும் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்துள்ளது.
பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், கடந்த 2010 ஆம் ஆண்டு ‘ஒபாமா கெயார்’ என்ற மலிவு கட்டண காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் பிரசார காலத்தின்போது, ‘ஒபாமா கெயார்’ திட்டத்தை இல்லாதொழித்து புதிய சுகாதார பராமரிப்பு சட்டமூலத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப ‘ஒபாமாகெயார்’ காப்பீட்டு திட்டத்தை இரத்து செய்யும் ட்ரம்பின்