தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
வட மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்திய பின்னர், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் சம்பந்தன் உள்ளிட்டோர் விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அமைச்சர்கள் விடயத்தில் முதலமைச்சர் நெகிழ்வு போக்கை கடைபிடித்தார்.
இதற்கமைய குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இரு அமைச்சர்களையும் பதவி விலகுமாறும், ஏனைய இரு அமைச்சர்கள் மீதும் விசாரணை நடைபெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து முதலமைச்சருக்கு எதிராக வட மாகாண ஆளுனரிடம் சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெறப்பட்டது.
இந்த பின்புலத்தில் வட மாகாண சபையில் தொடர்ந்தும் இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையிலேயே சம்பந்தன், விக்னேஸ்வரனை நாளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





