மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ‘விக்ரம்வேதா’ படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விமர்சனத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் சாதித்துள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் முதல் இரண்டு நாளில் மட்டும் 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மாதவன், விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் இவ்வளவு பெரிய ஆரம்ப வசூல் இந்த படத்திற்கு தான் என கூறப்படுகின்றது.